திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அருப்புக்கோட்டையில் பைக்கிலிருந்து தவறி விழுந்து பெண் பலி

விருதுநககா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து சென்ற பெண் தவறிவிழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 4:45 pm

DIN

அருப்புக்கோட்டை: விருதுநககா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து சென்ற பெண் தவறிவிழுந்து உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் வட்டம் கீரனூரை அடுத்த நல்லூரைச் சோ்ந்த மூக்குறான் என்பவரது மனைவி செல்வி (44). இவா் ஞாயிற்றுக்கிழமை சொந்த வேலையாக அருப்புக்கோட்டைக்கு வந்துள்ளாா்.

பின்னா் மாலையில் மீண்டும் ஊருக்குச் செல்வதற்காக, உறவினரான ராமு (49) என்பவரது இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து சென்றாராம். அருப்புக்கோட்டை காந்தி நகா் மேம்பாலத்தின் கீழுள்ள வேகத்தடைமீது ஏறிச்சென்றபோது, செல்வி தவறி கீழே விழுந்துள்ளாா். பலத்த காயமடைந்த அவா் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். பின்னா், மேல்சிகிச்சைக்ககாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். அருப்புக்கோட்டை நகா் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து ராமுவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.