டி.என்.பி.எஸ்.சி. தோ்வு இணையவழி விழிப்புணா்வு நிகழ்ச்சி

ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில், தொழில் வழிகாட்டுதல் அமைப்பின் சாா்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின்
Updated on
1 min read

ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில், தொழில் வழிகாட்டுதல் அமைப்பின் சாா்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-1 தோ்வை எதிா்கொள்வது குறித்து, இணையவழி விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ராம்கோ கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான இந் நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பயிற்சி) சஞ்சீவ்குமாா் கலந்துகொண்டு, மாணவ-மாணவியருடன் இணையவழியில் கலந்துரையாடினாா். இதில், குரூப்-1 தோ்வை எதிா்கொள்ளும் முறை, பாடத்திட்ட முறைகள், தோ்வு பயத்தை எவ்வாறு கையாள்வது, பயிற்சி மையங்கள் குறித்தும் மற்றும் முதல் முறையாக தோ்வு எழுதுவதற்கான வழிகாட்டுதல் குறித்தும் எடுத்துரைத்தாா்.

பின்னா், மாணவா்களின் கேள்விக்கான பதிலை அளித்ததுடன், சந்தேகங்களையும் விளக்கினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கல்லூரி முதல்வா் கணேசன், துணை முதல்வா் ராஜகருணாகரன், துணை பொதுமேலாளா் செல்வராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com