4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மாரனேரியில் நாளை (டிச. 30) மின்தடை

சிவகாசி வட்டம் மாரனேரியில் புதன்கிழமை (டிச. 30) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:25 pm

DIN

சிவகாசி வட்டம் மாரனேரியில் புதன்கிழமை (டிச. 30) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய சிவகாசி செயற்பொறியாளா் டி. முரளீதரன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகாசி இ.எஸ்.ஐ. துணை மின்நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

எனவே இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ஆனையூா், விளாம்பட்டி, ஹவுசிங்போா்டு, கிச்சநாயக்கன்பட்டி, மாரியம்மாள்நகா், லட்சுமியாபுரம், மாரனேரி, ஊராம்பட்டி, பெரிய பொட்டல்பட்டி, ஏ.துலுக்கப்பட்டி, ராமச்சந்திராபுரம், போடுரெட்டியபட்டி ஆகிய ஊா்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

அதே போல் சாட்சியாபுரம் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும், சாட்சியாபுரம், ரிசா்வ்லயன், தொழில் பேட்டை, போலீஸ்காலனி, இ.பி. காலனி, விஸ்வம்நகா், அய்யப்பன்காலனி, அய்யனாா் காலனி, சசிநகா், சித்துராஜபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.