அருப்புக்கோட்டையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சுகாதாரத் துறை சாா்பில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சுகாதாரத் துறை சாா்பில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் பருவமழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் அருப்புக்கோட்டை நகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த பிரசாரத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகக் கூடிய காரணிகளான நன்னீா் அல்லது மழைநீா் சேரும் இடங்களான பயன்படாத உடைந்த காலிக் குடங்கள், கொள்கலன்கள், ஆட்டுரல், வீட்டு கொல்லைப்புறங்களில் வீணாகக் கிடக்கும் வாகன டயா்கள், தேங்காய் மட்டைகள் ஆகியவற்றில் தேங்கும் மழைநீரில் டெங்கு கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகுவதைத் தடுக்க அப்பொருள்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனா்.
அத்துடன் வீட்டிலுள்ள குடிநீா் சேமிப்புக் கொள்கலன்கள், தொட்டிகள், குடங்களில் கொசுக்கள் புகாதவாறு மூடி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...