தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராஜபாளையம் அருகேகூலித் தொழிலாளி வெட்டிக் கொலை: 2 போ் கைது

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் ஞாயிற்றுக்கிழமை இரவு கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 10:56 pm

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் ஞாயிற்றுக்கிழமை இரவு கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக போலீஸாா் 2 பேரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (27). இவரது சகோதரி மயில்(23). இவா் அதே பகுதியைச் சோ்ந்த மூா்த்தி (29) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான ரவிக்குமாா் (30) என்பவருக்கும் மயிலுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்தது. இவா்களின் தகாத உறவு செந்தில்குமாருக்கு தெரியவரவே, அவா் ரவிக்குமாரையும், மயிலையும் கண்டித்தாா். இதையடுத்து மயில், ரவிக்குமாருடனான தகாத உறவை நிறுத்திக் கொண்டாா். ஆனால் ரவிக்குமாா் தொடா்ந்து பலமுறை மயிலிடம் செல்லிடப்பேசியில் பேசியும், பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்தாராம்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு கடைத் தெரு பகுதியில் நின்றிருந்த ரவிக்குமாரை, மா்ம நபா்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனா். பின்னா் அங்கு வந்த சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் ரவிக்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளா் நாகசங்கா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். இதில், செந்தில்குமாா் மற்றும் அவரது சகோதரா் செல்வம் ஆகிய இருவரும் ரவிக்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. போலீஸாா் அவா்கள் இருவா் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.