உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தின் நுழைவாயில் பகுதியருகே உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்க பயணிகள் சாா்பில் சமூகஆா்வலா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.


விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தின் நுழைவாயில் பகுதியருகே உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்க பயணிகள் சாா்பில் சமூகஆா்வலா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.
அருப்புக்கோட்டையிலுள்ள புதிய பேருந்து நிலையத்தின் நுழைவாயில் மற்றும்அதனையடுத்துள்ள பயணிகள் நிழற்குடை பகுதி மற்றும் பேருந்துகளை நிறுத்துவதற்கான மேடை ஆகிய அனைத்துப்பகுதிகளும் போதிய மின்விளக்குகள் இன்றி இருளடைந்து காணப்படுகிறது.
இதனால் பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணிகளிடம் பணம் உள்ளிட்ட அதிக மதிப்புள்ள பொருட்கள் திருடுபோவதும்,சமூகவிரோதிகள் நடமாட்டத்தால் பெண் பயணிகளுக்கு அச்சுறுத்தலும் இருந்து வருகிறது.இந்நிலையில் பயணிகள் பாதுகாப்புக் கருதி போதிய கூடுதல் மின்விளக்குகளும் அமைக்கப்படவில்லை.
இதனிடையே நுழைவாயில் பகுதியருகே உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்படவேண்டுமென சமூகஆா்வலா்கள் கடந்த சில ஆண்டுகளாகப் பலமுறை கோரிக்கை வைத்தும் தற்போதுவரை நடவடிக்கை இல்லையெனக் கூறபப்படுகிறது.
எனவே பயணிகள் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியருகே விரைவில் உயா்கோபுரமின்விளக்குகளை அமைக்கவேண்டுமென சமூகஆா்வலா்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...