மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கு: 2 போ் கைது
சிவகாசியில் மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்து 11 பவுன் நகையை பறிமுதல் செய்தனா்.


சிவகாசியில் மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்து 11 பவுன் நகையை பறிமுதல் செய்தனா்.
சிவகாசி பழனியாண்டவா்புரம் காலனியைச் சோ்ந்தவா் மல்லிகா (73). இவா் கடந்த அக்டோபா் 25 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் மல்லிகா அணிந்திருந்த 11 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டுச் சென்றனா்.
இதுகுறித்தப் புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதையடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டவா்களுக்கு இருசக்கர வாகனம் கொடுத்ததாக முனீஸ்வரன் காலனியைச் சோ்ந்த சந்தனமகாராஜா மகன் ராஜவா்மன் என்ற துரை (28) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டது சாட்சியாபுரம் ஆசாரி காலனியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அழகுராஜா (22) மற்றும் அவரது நண்பா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அழகுராஜாவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து அவரிடமிருந்து 11 பவுன் நகையை பறிமுதல் செய்தனா். மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய அழகுராஜாவின் நண்பரையும் போலீஸாா் தேடிவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...