தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராஜபாளையம் அருகே நூற்பாலையில் தீ விபத்து

ராஜபாளையம் அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து திங்கட்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News image
தீ விபத்து ஏற்பட்ட நூற்பாலை.
Updated On :23 நவம்பர் 2020, 9:01 am

DIN

ராஜபாளையம் அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து திங்கட்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே முதுகுடியில் ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான நூற்பாலையில் காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து ராஜபாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

Story image

தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் நூற்பாலையில் உள்ள நூல்கள் மற்றும் மூன்று இயந்திரங்கள் முற்றிலும் தீயில் எரிந்து சேதமாயின.

Story image

தீ விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.