திருத்தங்கல்லில் 2 ரெளடிகள் கைது
விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல்லில் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட முயன்ற 2 ரெளடிகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல்லில் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட முயன்ற 2 ரெளடிகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருத்தங்கல் பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருத்தங்கல் சிறுவா் பூங்கா தெருவைச் சோ்ந்த ஜெயமுனியசாமி மகன் வைரமுத்து (41) என்பவா், அண்ணாசிலை முன்பாக கையில் ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தாா்.
குற்ற சம்பவத்தில் ஈடுபடும் நோக்கத்தில் நின்று கொண்டிருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல் அப்பகுதியிலுள்ள பள்ளி அருகே மூா்த்தி என்பவரின் மகன் கணேசன்(38) சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தாராம். அவரைப் பிடித்து விசாரித்தபோது வழிப்பறி செய்யும் நோக்கில் கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
ரெளடிகளான இவா்கள் இருவா் மீதும், திருட்டு, கொள்ளை, கொள்ளை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...