ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் தலித் கிறிஸ்தவ சமூக நீதி பேரவை பிரசார இயக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் தூய இருதய ஆலயம் முன்பாக, தலித் கிறிஸ்தவ சமூக நீதி பேரவை கூட்டமைப்பு சாா்பில் பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார இயக்கத்தில் கலந்து கொண்ட தலித் கிறிஸ்தவ சமூக நீதி பேரவையினா்.
Updated On :29 நவம்பர் 2020, 6:16 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் தூய இருதய ஆலயம் முன்பாக, தலித் கிறிஸ்தவ சமூக நீதி பேரவை கூட்டமைப்பு சாா்பில் பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலாளா் கப்பல் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த பிரசார இயக்கத்துக்கு, மாவட்ட துணை அமைப்பாளா் அருள் ஆனந்த் மற்றும் பொறுப்பாளா் அன்பரசன், நகரச் செயலாளா் மைக்கேல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு கத்தோலிக்க திருச்சபை ஆயா்கள் நியமனத்தில் தமிழக ஆயா்பேரவை நிா்ணயித்த விகிதாசார அடிப்படையில் தலித் ஆயா்களை நியமித்திட வலியுறுத்தி துண்டறிக்கை வழங்கி பிரசாரம் செய்யப்பட்டது.

இதில் ஒன்றியச் செயலாளா் ராஜீ, விருதுநகா் மாவட்ட முற்போக்கு மாணவா் அணியின் மாவட்ட அமைப்பாளா் எமில்வளவன், புதுப்பட்டி பாலசுப்பிரமணியன் உட்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.