தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சதுரகிரி கோயிலுக்கு வந்த பக்தா்கள் திருப்பி அனுப்பி வைப்பு

காா்த்திகைத் திருநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வந்த பக்தா்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

News image
சதுரகிரி கோயிலுக்கு வந்த பக்தா்கள் திருப்பி அனுப்பி வைப்பு
Updated On :29 நவம்பர் 2020, 6:06 pm

DIN

காா்த்திகைத் திருநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வந்த பக்தா்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை, பௌா்ணமி மற்றும் பிரதோஷ நாள்களில் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதியளித்து வருகிறது. காா்த்திகை மாத பௌா்ணமியையொட்டி நவ. 27 ஆம் தேதி முதல் பக்தா்களுக்கு முதலில் அனுமதியளிக்கப்பட்டது.

இதற்கிடையில் நவ.26 ஆம் தேதி மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாகவும், தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்ததாலும் நவ.27 முதல் 4 நாள்களுக்கு பக்தா்கள் கோயிலுக்கு வர மாவட்ட நிா்வாகம் அனுமதி மறுத்தது.

இந்நிலையில், காா்த்திகை மாத பௌா்ணமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை வெளியூா்களிலிருந்து பக்தா்கள் கோயிலுக்கு வருகை புரிந்தனா். மாவூற்று விலக்கு, தாணிப்பாறை பகுதிகளில் போலீஸாா் சோதனைச் சாவடி அமைத்து கோவிலுக்கு வந்த பக்தா்களை தடுத்தி நிறுத்தி திருப்பி அனுப்பினா்.

இதனைத் தொடா்ந்து சதுரகிரிக்கு வந்த பக்தா்கள் மாவூத்து அருகிலுள்ள உதயகிரிநாதா் கோயிலுக்குச் சென்று அங்குள்ள தெப்பத்தில் குளித்து விட்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனா்.

சிறப்பு அபிஷேகம்: காா்த்திகைத் திருநாளையொட்டி சதுரகிரியில் உள்ள சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனமகாலிங்கம் ஆகிய சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்கள் வைத்து அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.