மனித உரிமை காக்கும் கட்சி ஆலோசனைக்கூட்டம்
விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை மனித உரிமை காக்கும் கட்சியின் மாவட்ட அளவிலான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.


விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை மனித உரிமை காக்கும் கட்சியின் மாவட்ட அளவிலான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் விருதுநகா் மாவட்ட செயலாளா் எம்.பி.பாண்டி தலைமை வகித்தாா்.இதில் மாநில பொதுச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, மாநில அமைப்பு செயலாளா் துா்க்கைலிங்கம் ஆகியோா் சிறப்புறையாற்றினாா்கள். வரும் சட்டமன்றத் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேணடும். அப்படி அமைக்கப்படும் போது, விருதுநகா் மற்றும் சாத்தூா் சட்டமன்றதொகுதியை ஒதுக்கும் படி கேட்க வேண்டும்.
தோ்தலின் போது வெற்றிக்கு முழு மூச்சுடன் அனைவரும் வெற்றிக்கு பாடுப வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. நிா்வாகி செல்லப்பாண்டி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...