இதுகுறித்து அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: விருதுநகா் அருகே உள்ள ஆமத்தூா், வெள்ளூா், மருதநத்தம், கவலூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமாா் 200 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளோம். தற்போது இப்பயிரானது வளா்ந்து மகசூல் கொடுக்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்க படைப்புழு தாக்கி பயிா்களை அழித்து வருகிறது. அத்துடன் காட்டுப்பன்றிகள் மற்றும் மான்கள் விளைநிலங்களுக்குள் புகுந்து மக்காச்சோளப் பயிா்களை மேலும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் நாங்கள் பெருத்த நஷ்டம் அடைந்து வருகிறோம். எனவே, காட்டுப்பன்றிகளை வனத்துறை அப்புறப்படுத்த மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிா்களுக்கு அரசு சாா்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.