47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராஜபாளையம் கேபிள் டி.வி.யில் புதிய திரைப்படம்: விஜய் சேதுபதி ரசிகர்கள் அதிர்ச்சி

ராஜபாளையத்தில் தனியார் கேபிள் டிவியில் ஓ.டி.டி யில் வெளியான புதிய திரைப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

News image
Updated On :4 அக்டோபர் 2020, 2:59 pm

DIN

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியார் கேபிள் டிவியில் ஓ.டி.டி யில் வெளியான புதிய திரைப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. படக்குழுவினர் நேரில் வந்து, கேபிள் டிவி ஊழியர்கள் இருவரையும், கணிணிகள் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்து ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து, இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் க.பெ. ரணசிங்கம் என்ற  திரைப்படம் கடந்த 2ஆம் தேதி ஓ.டி.டி. யில் வெளியானது. இந்த படத்தை சனிக்கிழமை ராஜபாளையம் தனியார் கேபிள் டி.வியில் முழுமையாக ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இதனையறிந்த விஜய் சேதுபதி ரசிகர்கள், சென்னையில் இருந்த இயக்குனர் விருமாண்டி மற்றும் கதாசிரியர் ஷண்முக முத்துசாமியிடம் தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ராஜபாளையத்திற்கு நேரடியாக வந்த படக்குழுவினர் ரசிகர்கள் உதவியுடன் கேபிள் டிவியின் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று கம்ப்யூட்டர் மற்றும் செட் அப் பாக்ஸ் பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் பறிமுதல் செய்த உபகரணங்களுடன் கேபிள் டிவி ஊழியர்கள் மோகன், திருமுருக பிரவீன் இருவரையும் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கேபிள் டிவி நிர்வாகத்தின் மீது, விருதுநகர் மாவட்ட திருட்டு விசிடி குற்ற ஒழிப்பு துறையினரிடம் படக் குழுவினர் புகார் அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.