மலையரசன் கோவிலில் புரட்டாசி மாத சிறப்பு வழிபாடு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருள்மிகு நித்தியானந்த சுவாமி என்கிற மலையரசன் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருள்மிகு நித்தியானந்த சுவாமி என்கிற மலையரசன் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அருப்புக்கோட்டை அருள்மிகு நித்தியானந்தசுவாமி என்கிற மலையரசன் கோவிலில் இயற்கையாக அமைந்த குன்றின் அடிவாரத்தில் நித்தியானந்த சுவாமியாகிய விஷ்ணு பெருமான், பாறையில் செதுக்கப்பட்ட அனந்த சயனராகக் காட்சியளிப்பதை பக்தர்கள் தனிச்சிறப்பாகக் கருதுகின்றனர்.
இந்நிலையில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு காலை 8 மணிக்குத் தொடங்கிய சிறப்பு அபிபிஷேகங்கள் நித்தியானந்த சுவாமிக்கும், உற்சவருக்கும் ஒருங்கே நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. இப்பூஜையை அடுத்து மாலை 4 மணிக்கும் பின்னர் மாலை 6 மணிக்கும் சிறப்பு தீப, தூப ஆராதனைகள் நடைபெற்று கருடவாகனத்தில் அருள்மிகு நித்தியானந்த சுவாமி அருள்பாலித்தார்.
அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாமரை, செவ்வரளிமலர்கள், துளசி மற்றும் மலர் மாலை, பழங்கள், பட்டுஅங்கவஸ்திரம் ஆகியவற்றை இறைவனுக்குப் படைத்தும், அங்குள்ள ஆஞ்சநேயர் விக்கிரகத்திற்கு வெற்றிலை, துளசிமாலை அணிவித்தும் வழிபட்டனர். சிறப்பு வழிபாட்டில் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன.
மாலை 6 மணி முதல் சிறப்பு அன்னதானமும்,பிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையாதலால் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் இருந்தது. மிகநீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...