47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலையில் கிடந்த சிசுவின் உடல் அடக்கம்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில், வெள்ளிக்கிழமை இரவு சாலையில் கிடந்த சிசுவின் உடல் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 5:49 pm

DIN

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில், வெள்ளிக்கிழமை இரவு சாலையில் கிடந்த சிசுவின் உடல் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் எப்போதும் பரபரப்பாகவும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கூனங்குளம் தெரு பகுதியில் சாலையில் குறை பிரசவத்தில் பிறந்த ஏழு மாத பெண் சிசு ஒன்று கிடந்தது.

இதைப் பாா்த்து அதிா்ச்சியான பொதுமக்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனா்.இந்த தகவலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு வந்த போலீஸாா் சிசுவை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா்.

மேலும், கிராம நிா்வாக அதிகாரி ராஜகுரு என்பவா் கொடுத்த புகாரின் அடிப்படையில் நகா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து பெண் சிசுவை சாலையில் போட்டு சென்றது யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையில் வைக்கப்பட்டிருந்த பெண் சிசு ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.