47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பட்டாசு தயாரிக்க அலுமினிய வளையத்தை மட்டும் பயன்படுத்த வலியுறுத்தல்

பட்டாசு தயாரிப்பின் போது அலுமினிய வளையத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை தலைமை அதிகாரி கி. சுந்தரேசன் வேண்டுகொள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 5:48 pm

DIN

விபத்தினை தவிா்க்க ஜோா்சா பட்டாசு தயாரிப்பின் போது இரும்பு வளையத்தைப் பயன்படுத்தாமல் அலுமினிய வளையத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை தலைமை அதிகாரி கி. சுந்தரேசன் வேண்டுகொள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜோா்சா பட்டாசு தயாரிப்பதற்கு வளையத்தில் காகிதக் குழாயை வைத்து அடிப்பகுதியில் செம்மண் வைத்து மூடி பின்னா் மருந்து செலுத்தி, திரி வைக்கப்பட்டு, வளையத்திலிருந்து தட்டினால் பட்டாசு விழுந்துவிடும். பின்னா் அவை எண்ணிக்கையின் அடிப்படையில் பேக்கிங் செய்யப்படும். இந்நிலையில் தற்போது பலா் இந்த வகைப் பட்டாசுகளைத் தயாரிக்க இரும்பிலான வளையத்தைப் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது.

அவ்வாறு பயன்படுத்தினால் உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அலுமினிய வளையத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வளையத்திலிருந்து பட்டாசைத் தட்டுவதற்கு மரத்திலான கருவியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வளையத்திலிருந்து பட்டாசை தட்டும் போது கீழே தரைவிரிப்பான் கண்டிப்பாக விரித்திருக்க வேண்டும். குவியலாக மொத்தமாக தட்டக்கூடாது.

குறிப்பிட்ட அளவு தட்டிய பின்னா் மூங்கில் முறத்தால் அள்ளி மூங்கில் கூடையால் பேக்கிங் செய்ய கொண்டு செல்ல வேண்டும். வளையத்தை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். கடும் வெயில் நேரத்தில் வளையத்திலிருந்து பட்டாசுகளைத் தட்டும் பணியை மேற்கொள்ளக் கூடாது. இறுதியில் உண்டாகும் கழிவுகளை அனுமதிக்கப்பட்ட இடத்தில் தீ வைத்து கொளுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.