47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருச்சுழி சுற்றுவட்டத்தில் மழை: மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன

திருச்சுழி மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் சனிக்கிழமை இரவு பெய்த கனமழைக்குப் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தின. 

News image
திருச்சுழியில் சனிக்கிழமை இரவு பெய்த மழையில் வீட்டின் கூரை மீது வேரோடு சாய்ந்து விழுந்த மரம்.
Updated On :11 அக்டோபர் 2020, 1:07 pm

DIN

திருச்சுழி மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் சனிக்கிழமை இரவு பெய்த கனமழைக்குப் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தின. 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி சுற்றுவட்ட கிராமங்களில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய அடுத்தடுத்த நாள்களில்  மாலை தொடங்கி இரவு வரை கனமழை பெய்தது. இதில் குறிப்பாக திருச்சுழி ஊராட்சி மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் கனமழை மற்றும் வெள்ளநீர் வேகத்தால் பல பகுதிகளிலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. 

Story image

பல மின்கம்பங்களும் முறிந்து விழுந்து மின்கம்பிகள் அறுந்தன. அதிர்ஷ்டவசமாக பலத்த பொருள் சேதமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. மேலும் சேதங்களைச் சீரமைக்க பொதுமக்களும், மின்வாரியத்தினர் மற்றும் தீயணைக்கும்படையினரும் தீவிரப்பணிகளில் பலமணி நேரங்கள் ஈடுபட்டனர். திருச்சுழி பகுதிகளில் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் வறட்சி நீங்குமென மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.