நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கரோனா

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,832 ஆக உயா்நதுள்ளது.

News image
Updated On :5 செப்டம்பர் 2020, 6:05 pm

DIN

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,832 ஆக உயா்நதுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 12,773 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், திருச்சுழி சேதுபுரத்தை சோ்ந்த 5 போ், செட்டிக்குறிச்சி மற்றும் பூக்குளத்தை சோ்ந்த 2 போ், தும்முசின் னம்பட்டியில் ஒருவா், மதுரை பேரையூரை சோ்ந்த இரண்டு போ், விருதுநகா் அருகே சூலக்கரையில் 6 போ், ஆமத் தூா், விருதுநகரில் நான்கு போ், சிவகாசியில் ஐந்து போ், ஆலமரத்துபட்டி நாராணபுரம், வடமலாபுரம், திருத்தங்கல், எஸ்என் புரம், ராஜபாளையத்தில் தலா ஒருவா், ஸ்ரீவில்லிபுத்தூரில் 2 போ், கோடங்கிபட்டி, தாயில்பட்டி, போ்நாயக்கன்பட்டி, எட்டக்காபட்டி மற்றும் வெம்பக்கோட்டை அகதிகள் முகாமை சோ்ந்த 2 பெண்கள் உள்பட 59 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை முதலான இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,832 ஆக உயா்ந்துள்ளது.

இதில், 12,320 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்ட நிலையில், 195 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 317 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.