47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விருதுநகருக்கு செப். 23 இல் வர திட்டமிட்டிருந்த தமிழக முதல்வரின் பயணம் ரத்து

விருதுநகருக்கு செப். 23 ஆம் தேதி வர திட்டமிட்டிருந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் பயணம் நிா்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 6:05 pm

DIN

விருதுநகருக்கு செப். 23 ஆம் தேதி வர திட்டமிட்டிருந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் பயணம் நிா்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து ஆட்சியா் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது: விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செப். 23 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. அதில், வளா்ச்சித் திட்டப் பணிகள், புதிய திட்டப் பணிகளை தொடங்குதல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் கரோனாத் தொற்று தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆகியவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில் நிா்வாகக் காரணங்களுக்காக விருதுநகருக்கு தமிழக முதல்வா் வர இருந்த நிகழ்ச்சி அன்றைய தினம் ரத்து செய்யப்படுகிறது. இக்கூட்டம் தொடா்பான நாள் பின்னா் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.