புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஸ்ரீவிலி. ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

Updated On :3 ஆகஸ்ட் 2021, 9:11 am

DIN

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. 108 வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூராகும். லட்சுமி தேவியின் அம்சம் ஆகிய ஸ்ரீஆண்டாள் மானிட பெண்ணாக பிறந்து பூமாலை சூட்டி பின் பாமாலை பாடி இறைவனை அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான். இங்கு ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத் திருவிழா மிக வெகு விமரிசையாக கொண்டாடப்படும். 

இந்த வருடத்திற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 

கரோனா இரண்டாவது காரணமாக தமிழகத்தின் 1, 2, 3 ஆகிய நாட்களில் பக்தர்களுக்கு திருக்கோவிலில் அனுமதி இல்லை என தமிழக அரசின் உத்தரவையடுத்து பக்தர்கள் யாரும் இன்று கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. பட்டாசார்யர்கள் முன்னிலையில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில் அலுவலக ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

சென்ற வருடம் போல் இந்த வருடமும் அனைத்து திருவிழா நடை முறைகளும் கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இன்று கொடியேற்றத்துடன் துவங்கிய ஆடிப்பூர விழாவில் ஐந்தாம் திருநாள் 7ஆம் தேதியும், கருட சேவை 9ஆம் தேதியும் நடைபெறும். முக்கிய நிகழ்வான திரு ஆடிப்பூர தேரோட்டம் 11ஆம் தேதி நடைபெறுகிறது. சென்ற வருடம் போல் இந்த வருடமும் கோவில் பிரகாரத்தில் தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஸ்ரீஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் காட்சியளிப்பர்.

Story image

நிகழ்ச்சியில் தக்கார் ரவிச்சந்திரன் செயல் அலுவலர் இளங்கோவன் காவல் துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம், காவல் ஆய்வாளர் கீதா காவல் சார்பு ஆய்வாளர் கருத்தபாண்டி மற்றும் கோயில் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.