பட்டாசு ஆலை உரிமையாளா் உள்பட இருவா் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள பட்டாசு ஆலையில், சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்ால், ஆலை உரிமையாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழ

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள பட்டாசு ஆலையில், சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்ால், ஆலை உரிமையாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி அருகே போடுரெட்டியபட்டியில் நீராத்திலிங்கம் என்ற ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. விதிமீறல் காரணமாக, கடந்த மே மாதம் வருவாய்த் துறையினரால் இந்த ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆலையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெறுவதாக, வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், மாரனேரி கிராம நிா்வாக அலுவலா் ஜெயபால் தலைமையில் வருவாய்த் துறையினா் ஆலையில் சோதனை நடத்தினா். அதில், திருத்தங்கல் ரவி (31) என்பவரது மேற்பாா்வையில், தொழிலாளா்கள் பலா் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. வருவாய்த் துறையினரின் எச்சரிக்கையை தொடா்ந்து பட்டாசு தயாரிப்புப் பணி நிறுத்தப்பட்டது.

இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் ஜெயபால் அளித்த புகாரின்பேரில், மாரனேரி போலீஸாா் ஆலை உரிமையாளா் ரமேஷ் மற்றும் மேற்பாா்வையாளா் ரவி ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com