போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

ஸ்ரீவில்லிபுத்தூர்: பெண்களை கேலி செய்வதை தட்டிக்கேட்ட கூலித்தொழிலாளி கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண்களை கேலி செய்வதை பற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுத்த கூலித் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

News image
முருகன்
Updated On :25 ஆகஸ்ட் 2021, 5:11 am

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண்களை கேலி செய்வதை பற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுத்த கூலித் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது பாட்ட குளம் அரியநாயகிபுரம்  பகுதியை சேர்ந்தவர் முருகன் (27). இவர் கூலித் தொழிலாளி. அதேபோல் பாட்டக்குளம் நடு தெருவைச் சேர்ந்தவர் லாரன்ஸ் (21) இந்த லாரன்ஸ் அடிக்கடி முருகன் பகுதியை சேர்ந்த பெண்களை கேலி கிண்டல் செய்துள்ளார். இதனை முருகன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது 

இந்நிலையில் நேற்று இரவு முருகன் இருக்கும் பகுதியைச் சேர்ந்த சிலருடன் கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்திற்கு சென்று பெண்களை கேலி செய்யும் லாரன்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் செவ்வாய்கிழமை இரவு சுமார் 10.30 மணி அளவில் முருகனின் வீட்டின் முன்பு  மனைவி கவிதா மற்றும் அம்மா மனைவியின் தம்பி ராஜா (19) ஆகியோர் இருந்துள்ளனர். அவரது அருகில் முருகன் படுத்து இருந்து உள்ளார்.


அப்போது அங்கு வந்த லாரன்ஸ் முருகனை ஆபாசமாக பேசி  கொலை மிரட்டல் விடுத்து அவரை அரிவாளால் வெட்டியுள்ளார் தடுக்க வந்த ராஜாவிற்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

லாரன்ஸ் வெட்டியதில்  படுகாயம் அடந்த முருகனை உறவினர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் போது செல்லும் வழியிலேயே முருகன் பரிதாபமாக இறந்தார்

இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை கொண்டு வரப்பட்டது சிறிய காயம் அடைந்த ராஜாக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது 

இந்த கொலை தொடர்பாக இறந்த முருகனின் மனைவி கவிதா (24) என்பவர் கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் அந்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கொலை செய்த லாரன்ஸை வலைவீசி தேடி வருகின்றனர்

பெண்களைக் கேலி செய்ததை பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் முருகன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பாட்டக்குளம் அரியநாயகிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.