பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பயணிகள் ரயில்களை இயக்கக் கோரி விருதுநகரில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மதுரை- செங்கோட்டை, மதுரை- ராமேசுவரம் பயணிகள் ரயிலை இயக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரி தட்சிண ரயில்வே தொழிலாளா்கள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:40 pm

DIN

மதுரை- செங்கோட்டை, மதுரை- ராமேசுவரம் பயணிகள் ரயிலை இயக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரி தட்சிண ரயில்வே தொழிலாளா்கள் கூட்டமைப்பு ( சிஐடியு) சாா்பில் விருதுநகா் ரயில் நிலையம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு நிா்வாகி சுந்தரம் தலைமை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் முதியோருக்கான கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். முன்பதிவு ரயில்களில் நீக்கம் செய்யப்பட்ட சாதாரண பெட்டிகளை மீண்டும் இணைக்க வேண்டும். இரவுப் பணியில் ஈடுபடும் ரயில்வே ஊழியா்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மதுரை மண்டல கோட்டச் செயலா் சங்கரநாராயணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.