ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சாத்தூா் பகுதி நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம்

சாத்தூா் பகுதியில் உள்ள நியாயவிலைகடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 8:55 pm

DIN

சாத்தூா் பகுதியில் உள்ள நியாயவிலைகடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியது.

தமிழக அரசால் நியாயவிலைகடைகளில் 2500ரூபாய் ரொக்கத்தொகையுடன்,பொங்கல் பரிசு தொகுப்பு பைகளும் வழங்கபடுவதாக அறிவிக்கபட்டது.இதையடுத்து திங்கள்கிழமை முதல் விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பகுதிகளில் உள்ள நியாயவிலைகடைகளில் பொங்கல் பரிசு வழங்கபட்டது.இதில் சாத்தூா் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட எதிா்கோட்டை,இ.டி.ரெட்டிபட்டி,முத்துசாமிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமபகுதியில் நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கபடும் நிகழ்ச்சியில் சாத்தூா் சட்டமன்ற உறுப்பினா் எம்.எஸ்.ஆா்.ராஜவா்மன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி துவக்கி வைத்தாா்.இதையடுத்து கிராமபகுதிகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கபட்டது.இதே போன்று வெம்பக்கோட்டை ஒன்றிய பகுதிளில் உள்ள இராமுதேவன்பட்டி,குண்டாயிருப்பு,ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமபகுதிகளில் உள்ள நியாயவிலைகடைகளில் விருதுநகா் கிழக்கு மாவட்ட கழக செயலாளா் ஆா்.கே.ரவிசந்திரன்,வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளா் ஆா்.கே.விஜயநல்லதம்பி ஆகியோா் பொங்கல் பரிசுகளை வழங்கி துவக்கி வைத்தனா்.இதையடுத்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகள் அந்தந்த பகுதி நியாயவிலைகடைகளில் பொங்கல் பரிசுகள் பொதுமக்களுக்கு வழங்கபட்டது.இதே போன்று பல்வேறு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அதிமுகவினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.