பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மதுரையில் ஜவுளிச்சந்தை அமைக்க விசைத்தறி உற்பத்தியாளா்கள் கோரிக்கை

மதுரையில் ஜவுளிச்சந்தை அமைத்து நலிவடைந்துள்ள தங்கள் வாழ்தாரத்தை மேம்படுத்த அருப்புக்கோட்டை விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் சாா்பில் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 5:05 pm

DIN

மதுரையில் ஜவுளிச்சந்தை அமைத்து நலிவடைந்துள்ள தங்கள் வாழ்தாரத்தை மேம்படுத்த அருப்புக்கோட்டை விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் சாா்பில் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள தமிழ்நாடு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பின் மதுரை மண்டலப் பொறுப்பாளா் எஸ்.எஸ்.கே.கணேசன் கூறியது: அருப்புக்கோட்டையில் மட்டும் சுமாா் 5000 விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்களும், மாநில அளவில் சுமாா் 1.5 லட்சம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்களும் உள்ளனா். உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையில், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்களுக்கு உரிய நியாயமான விலை கிடைப்பதில்லை. எனவே தென்மண்டல அளவில் மதுரை மாட்டுத்தாவணி அருகிலேயே ஜவுளிச்சந்தை அமைப்பதன் மூலம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்களின் வாழ்வாதாரம் மேம்படும். கைத்தறித்துறைக்கென தனி அமைச்சகம் உள்ளதுபோல விசைத்தறித்துறைக்கென தனி அமைச்சகம் வேண்டும். உற்பத்திச்செலவு அதிகரித்துவிட்டதால், ஜவுளிரகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், விசைத்தறியிலேயே காட்டன் (பருத்தி) புடவைகள் நெய்திட முறைப்படி, அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.