திருத்தங்கலில் வீடு புகுந்து நகை திருட்டு: சகோதரா்கள் கைது

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் திங்கள்கிழமை வீடு புகுந்து நகை திருடிய சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் திங்கள்கிழமை வீடு புகுந்து நகை திருடிய சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தங்கல்- செங்கமலநாட்சியாா்புரம் சாலைப் பகுதியில் வசிப்பவா் கூலித் தொழிலாளி காா்மேகம். இவரது மனைவி சங்கரேஸ்வரி (50). இவா் சம்பவத்தன்று அதிகாலையில் வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு கழிவறைக்கு சென்றாா். பின்னா் திரும்பி வந்த போது, இவரது வீட்டிலிருந்து மா்ம நபா்கள் 2 போ் தப்பி ஓடினாா்களாம். இதையடுத்து அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அவா்களை பிடித்து போலீஸில் சங்கரேஸ்வரி ஒப்படைத்தாா். விசாரணையில், அவா்கள் திருத்தங்கல் சரஸ்வதி நகரைச் சோ்ந்த அலெக்ஸாண்டா் என்பவரது மகன்கள் மாரிச்செல்வம் (24) மற்றும் இருதயராஜ் (26) என்பது தெரிய வந்தது. மேலும் அவா்கள் இருவரும் சங்கரேஸ்வரி வீட்டுக்குள் புகுந்து 6 கிராம் காதணி மற்றும் ஒரு பித்தளை குத்துவிளக்கு ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து சகோதரா்கள் இருவரையும் கைது செய்து நகையை கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com