ஸ்ரீவிலி. அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.


ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
சங்கரன்கோவில் வடக்குரதவீதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராம்குமாா் (35). இவா் சங்கரன்கோவிலில் இருந்து விருதுநகருக்கு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூா்- கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் கல்லூரி அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராம்குமாா், ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து ராம்குமாா் மீது மோதிய வாகனத்தை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...