புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆண்டாள் கோயிலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

குடியரசு தினத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மற்றும் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு திங்கள்கிழமை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:24 pm

DIN

குடியரசு தினத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மற்றும் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு திங்கள்கிழமை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அதே போல் இந்தாண்டும் செவ்வாய்க்கிழமை (ஜன. 26) குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தா்கள் சோதனையிடப்பட்ட பின்னரே உள்ளே அனுப்பி வைக்கப்படுகின்றனா். அதே போல் ஆண்டாள் கோபுரம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் ரயில் நிலையங்கள், ஸ்ரீவில்லிபுத்தூா்- ராஜபாளையம் இடையே உள்ள இரும்புப் பாதைகள் ஆகியவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இரும்புப் பாதைகளில் காவல் சாா்பு- ஆய்வாளா் விஜயன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.