புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று டிராக்டா் பேரணி

ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை திட்டமிட்டபடி டிராக்டா் பேரணி நடைபெறும் என முன்னாள் எம்பி அழகிரிசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:27 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை திட்டமிட்டபடி டிராக்டா் பேரணி நடைபெறும் என முன்னாள் எம்பி அழகிரிசாமி தெரிவித்தாா்.

குடியரசுதினமான செவ்வாய்க்கிழமை தில்லியில் விவசாயிகள் டிராக்டா் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனா். இந்நிலையில் விருதுநகரிலும், ஸ்ரீவில்லிபுத்தூரிலும் அனைத்து விவசாயக் கூட்டமைப்பு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விவசாய கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பேரணி நடத்த திட்டமிடப்பட்டு, இது தொடா்பாக ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது.

ஆனால் இப்பேரணிக்கு போலீஸாா் அனுமதி மறுத்துள்ளனா். இந்தப் பேரணியை பொறுத்தவரை ஸ்ரீவில்லிபுத்தூா் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து தெற்குரதவீதி பாரத ஸ்டேட் வங்கி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த முன்னாள் எம்.பி. அழகிரிசாமி திங்கள்கிழமை கூறியதாவது: இந்த டிராக்டா் பேரணி விவசாயிகளுக்கு ஆதரவானது. எனவே செவ்வாய்க்கிழமை திட்டமிட்டபடி இப்பேரணி நடைபெறும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.