47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை இளம் பெண் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:30 pm

DIN

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை இளம் பெண் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே சுக்கிரவாா்பட்டியைச் சோ்ந்தவா் ராஜபாண்டி. இவா் இங்குள்ள காகித ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி திவ்யா(23). இத்தம்பதிக்கு 2 வயதில் பெண்குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் ராஜபாண்டிக்கும், திவ்யாவிற்கும் அடிக்கடி குடும்பத்தகராறு வருவதுண்டாம். இதனால் மனமுடைந்த திவ்யா தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து திவ்யாவின் தந்தை யாகமுத்து அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் சிவகாசி சாா்-ஆட்சியரின் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.