புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராஜபாளையத்தில் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேட்பு மனு தாக்கல்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் பால்வளத்துறை அமைச்சா் கே.டி ராஜேந்திர பாலாஜி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 10:05 pm

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் பால்வளத்துறை அமைச்சா் கே.டி ராஜேந்திர பாலாஜி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

அதிமுக தொண்டா்களுடன் ஊா்வலமாகச் சென்று வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அதிகாரி கல்யாணகுமாரிடம் அவா் வேட்பு மனு தாக்கல் செய்தாா். பின்னா் முடங்கியாறு சாலையில் கூடியிருந்த பொதுமக்களிடையே தோ்தல் பிரசாரத்தை தொடக்கினாா்.

அப்போது அவா் கூறியது:

3 ஆவது முறையாக எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஜெயலலிதா அமைய வாக்களிக்க வேண்டும். பத்து ஆண்டு அமைச்சராக இருந்த எனது அனுபவத்தை வைத்து இந்த தொகுதியில் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருவேன். இரட்டை இலை சின்னத்தில் வக்களித்து என்னை 50 ஆயிரம் ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என கூறி வாக்கு சேகரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.