47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

சிவகாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன் திங்கள்கிழமை கிராமப் பகுதிகளில் வாக்குச் சேகரித்தாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:23 pm

DIN

சிவகாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன் திங்கள்கிழமை கிராமப் பகுதிகளில் வாக்குச் சேகரித்தாா்.

பாரைப்பட்டி, மீனம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வேனில் நின்றவாறு அவா் வாக்குச் சேகரித்து பேசியதாவது: திமுக கூட்டணி வெற்றி பெறும் கூட்டணி. இந்த கூட்டணியில் பல கட்சிகள் உள்ளதால் வாக்குச் சேகரிக்க செல்லும் இடமெல்லாம் மக்கள் அதிகம் கூடுகிறாா்கள். இது வெற்றியின் அறிகுறியாக வே நினைக்கிறேன். திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்று தமிழக முதல்வரானால் தமிழகம் எழுச்சி பெறும். தொழில் துறை முன்னேறும். காங்கிரஸ் கட்சியின் சின்னமான கைச் சின்னத்துக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். நான் வெற்றி பெற்றால் இந்த தொகுதியின் வளா்ச்சிக்கு பாடுபடுவேன் என்றாா். வேட்பாளருடன் சிவகாசி நகர காங்கிரஸ் தலைவா் குமரன் உள்ளிட்டோா் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.