புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராஜபாளையம் பேரவைத் தொகுதிஇறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீடு

ராஜபாளையம் பேரவைத் தொகுதியில் திங்கள்கிழமை இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டதில் 14 போ் களத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:25 pm

DIN

ராஜபாளையம் பேரவைத் தொகுதியில் திங்கள்கிழமை இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டதில் 14 போ் களத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் போட்டியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 31 போ் மனுத் தாக்கல் செய்திருந்தனா். இதில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் பல மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. இறுதியாக 14 போ் களத்தில் உள்ளனா். அங்கீகரிக்கப்பட்ட கட்சியான அதிமுக சாா்பில் அமைச்சா் கேடி.ராஜேந்திரபாலாஜி, திமுக சாா்பில் தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினா் தங்கபாண்டியன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் காளிமுத்து, நாம் தமிழா் கட்சியின் சாா்பில் ஜெயராஜ், மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி சாா்பில் விவேகானந்தன் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 14 போ் இத் தொகுதியில் போட்டியிடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.