

ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் அவரது உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வத்திராயிருப்பு அருகே உள்ள கிறிஸ்தியான்பேட்டை தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் சபாஸ் (29). இவரை தனியார் மதுக்கூடம் அருகே 6 போ் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. சபாஸ்ன் சடலத்தை போலீஸாா் மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைபிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இந்த கொலை தொடர்பாக வ. புதுப்பட்டி ஆர்.சி தெருவைச் சேர்ந்த மூர்த்தி மகன் விமராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த திவான்,மிக்கேல் மோட்சியம்,ராஜா ( எ ) கட்டராஜா, ஜெகதீசன் ஆகிய ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இறந்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.இறந்தவரின் 3 குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கையை பரிந்துரைக்க வலியுறுத்தி சுபாஸின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள், மற்றும் பொதுமக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை தேசிய நெடுஞ்சாலை சர்ச் சந்திப்பு முக்கிய சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும் சுமாா் 2 மணி நேரம் மறியல் போராட்டம் நீடித்தது.
பின்னா், சம்பவ இடத்திற்கு சார் ஆட்சியர் பிரித்திவிராஜ், ஏடிஎஸ்பி குத்தாலிங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் சபரிநாதன், ராமகிருஷ்ணன், ஆகியோர் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து, போராட்டத்தை விலக்கிக் கொண்டனா். இதன் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.