சமத்துவபுரத்திற்கான இடம்: திருச்சுழி ஒன்றிய கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சுழி ஒன்றிய கிராமங்களில் சமத்துவபுரம் அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.


அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியத்திற்குள்பட்ட கிராமங்களில் சமத்துவபுரம் அமைப்பதற்குத் தேவையான இடத்தைத் தேர்வு செய்வதற்காக செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருச்சுழி ஒன்றியத்திற்குள்பட்ட ஏதாவதொரு கிராமத்தில் தமிழக அரசின் திட்டமான சமத்துவபுரம் அமைப்பதற்கு அரசு ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன்படி சென்னிலைக்குடி, உடையனாம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாதரெட்டி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பேருந்து நிறுத்த வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட பலகாரணிகளுக்கு ஏற்றபடி சரியான இடத்தைத்தேர்வு செய்திட வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த ஆட்சியர், அத்தகைய உரிய வசதிகளுக்கேற்றபடியான பல இடங்களில் இருந்த நிலங்களை நேரில் ஆய்வு செய்தார்.
அதிகாரிகளுடனான கூட்டத்திற்குப்பிறகு தமிழக அரசிற்கு தேர்வு செய்த சில இடங்கள் பரிந்துரைக்கப்பட்டு திட்டம் நிறைவேற்றப்படுமென அப்போது ஆட்சியர் தெரிவித்தார். உடன் இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் திலகவதி, அருப்புக்கோட்டை வருவாய்க்கோட்டாட்சிர் கல்யாண்குமார், செயற்பொறியாளர் சக்திமுருகன், திருச்சுழி வட்டாட்சியர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அலுவலர்கள் பலரும் நேரில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...