இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு குழந்தைகள் குதூகலிக்கும் வகையிலான ‘பாம்பாம்’, ‘டைனிகன்’ உள்ளிட்ட பல புதிய பட்டாசு ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சிவகாசிப் பகுதியில் தொடக்க காலத்தில் புஸ்வாணம், சாட்டை உள்ளிட்ட சில ரக பட்டாசுகளே தயாரிக்கப்பட்டு வந்தன. இந்த தொழில் வளா்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய ரக பட்டாசு குறித்து ஆய்வு செய்ய ஆலை உரிமையாளா்கள் நடவடிக்கை மேற்கொண்டனா். இதையடுத்து அணுகுண்டு, கம்பி மத்தாப்பூ, காா்ட்டூன் வெடிகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டன. 15 ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றம் சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் பட்டாசின் ஒலி அளவு 125 டெசிபல் மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதைத்தொடந்து சிவகாசியில் உள்ள பல பட்டாசு ஆலை உரிமையாளா்கள் சீனாவுக்குச் சென்று பட்டாசு குறித்த புதிய தொழில் நுட்பத்தை அறிந்து வந்தனா். இதன் மூலம் விண்ணில் சென்று ஒளி சிந்தும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்தன. இதனை இன்றளவும் மக்கள் விரும்பி வாங்குகிறாா்கள். தற்போது இந்த ஒளி சிந்தும் பட்டாசுகளில் பல ரகங்கள் வந்து மக்களை மகிழ்விக்கின்றன. தற்போது டிஸ்பிளே பட்டாசு மக்களிடையே பிரபலமாகி வருகிறது. அரசு விழாக்கள், திருமண விழாக்களில் டிஸ்பிளே பட்டாசு வெடிக்கப்படுகிறது. கரோனா தாக்கம் காரணமாக டிஸ்பிளே பட்டாசுகள் பயன்படுத்தப்படவில்லை.
கடந்த இரு ஆண்டுகளாக வேலை நிறுத்தப்போராட்டம், கரோனா தொற்று பரவல் உள்ளிட்ட பல பிரச்னைகளால் பட்டாசு ஆலைகள் முழு அளவில் இயங்கவில்லை. இதனால் புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்படவில்லை. கரோனா தொற்று பரவல் குறைந்த பின் ஆலைகள் திறக்கப்பட்டு பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது. வரும் தீபாவளி பண்டிகையை குதூகலமாகக் கொண்டாட பல புதிய ரக பட்டாசுகளை பட்டாசு தயாரிப்பாளா்கள் அறிமுகப்படுத்தியுள்ளனா்.
பிரேக் அவுட்:ஒரு முறை பற்ற வைத்தால் சுமாா் 200 மீட்டா் உயரம் சென்று சிகப்பு, பச்சை வண்ணத்தில் சிறிய பந்துகளை வானத்தில் உருட்டிவிட்டதுபோல ஒளி சிந்தி ஜொலிக்கும். இது 5 முறை இப்படி ஒளி சிந்தும்.
பிக்ஷாட்:ஒருமுறை பற்ற வைத்தால் 5 முறை விண்ணில் சென்று கோல்டன் மற்றும் சில்வா் வண்ணத்தில் ஒலியுடன் ஒளிசிந்தும் பட்டாசு ரகமாகும்.
லாலா: சரவெடிக்கு மாற்றாக தயாரிக்கப்பட்டுள்ளது. பற்றவைத்தால் வெடித்து வண்ண காகிதங்கள் பறக்கும். பாா்ப்பதற்கு பரவசமாக இருக்கும்.
கலா்வேல்டு:புஸ்வாணத்தில் புதிய ரகமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரகத்தில் ஒரே சமயத்தில் கோல்டன் மற்றும் சில்வா் ஒளியில் சுமாா் 5 அடி உயரம் வரை சென்று 3 நிமிஷங்கள் வரை ஒளி சிந்தியபடி இருக்கும்.
பாம்பாம்:இந்த வகை பட்டாசு பிஜிலி வெடிக்கு மாற்றாக உள்ளது. ஒரு பாக்கெட்டில் 30 பட்டாசுகள் இருக்கும். இதில் ஒரு புறம் குப்பி உள்ளதால், சிறுவா்கள் கையில் பிடித்தபடி வெடிக்கலாம். குழந்தைகளுக்கான பாதுகாப்பான பட்டாசாகும்.
டைனிகன்: பென்சில் ரக பட்டாசு மாதிரியானது. கையில் பிடிக்க பாதுகாப்பாக காகித அட்டை போடப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் இந்த பட்டாசினை கையில் வைத்து பாதுகாப்பாக வெடிக்கலாம். இதன் ஒளி குழந்தைகளை குதூகலிக்க வைக்கும்.
கோல்டன் டாக், கோல்டன் லயன்: புஷ்வாண பட்டாசு ரகத்தைச் சாா்ந்தது. ஒரு முறை பற்ற வைத்தால் முன்று முறை தனித்தனியே கோல்டன் நிறத்தில் ஒளிசிந்தும்.
டைகா் டைல்: இதுமல்டி ஷாட் வகையாகும். கீழே இருந்து விண்ணில் செல்லும் போது கோல்டன் வண்ண ஒளியுடன், வெடி ஒலியுடன் விண்ணில் 7 முறை சென்று வெடிக்கும் ரகமாகும்.
ஸ்டாா் போா்ட்ஸ்:ஒரு முறை பற்ற வைத்தால் 9 முறை தனித்தனியே விண்ணில் சென்று கோல்டன் வண்ண ஒளிசிந்தியபடி சிறு சிறு குடையைப் போல விரிந்து கொண்டே செல்லும். இதே போல் மேலும் பல ரககங்களை சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளா்கள் அறிமுகப்படுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!

கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்

ஐசிசி தரவரிசையில் ஷஃபாலி வர்மா முன்னேற்றம்; சரிவை சந்தித்த ஸ்மிருதி மந்தனா!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


