அருப்புக்கோட்டையில் தொடர் மழை
By DIN | Published On : 09th May 2021 05:45 PM | Last Updated : 09th May 2021 05:45 PM | அ+அ அ- |

அருப்புக்கோட்டையில் பெய்த தொடர் மழை.
அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை இடைவெளி விட்டுவிட்டுத் தொடர்மழை பெய்தது. இம்மழையால் நகரின் நீர்நிலைகளில் நீர் வரத்து ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை காலைமுதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் நண்பகல் 12.30 மணிக்கு சுமார் அரைமணிநேரம் கனமழை பெய்தது.
இதையடுத்து சிறிது இடைவெளிவிட்டு சுமார் 1.15 மணிக்கு மீண்டும் சுமார் அரைமணிநேரம் வீதம் கனமழை பெய்தது. மேலும் சுமார் 3 மணிக்கு மிதமான மழை சிறிது நேரம் பெய்தது.
இவ்விதம் சிறிது இடைவெளிவிட்டுவிட்டு மழைபெய்த வண்ணம் இருந்ததால் நகரின் முக்கிய நீர்நிலைகளான செவல்கண்மாய், செங்காட்டூருணி, பெரியகண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது.
அக்னி நட்சத்திரம் தொடங்கி சில நாட்கள் ஆகிவிட்டநிலையில் இம்மழை காரணமாக வெயிலின் தாக்கம் இன்றி குளிர்ந்த, இதமான தட்பவெப்பம் நிலவியது குறிப்பிடத்தக்கது.