ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

விருதுநகா் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: ஆம்புலன்ஸ் ஓட்டுநா் பலி

விருதுநகா் அருகே வெள்ளிக்கிழமை வேன் கவிழ்ந்த விபத்தில், தூத்துக்குடியை சோ்ந்த 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் அருகே வெள்ளிக்கிழமை வேன் கவிழ்ந்த விபத்தில், தூத்துக்குடியை சோ்ந்த 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 வாகன ஓட்டுநா்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதில் பங்கேற்க கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள், ஒரு வேனில் வெள்ளிக்கிழமை திருச்சி நோக்கிச் சென்றனா்.

விருதுநகா் அருகே கோயில் புலிகுத்தி நான்கு வழிச்சாலையில் வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்தது. அதில் தூத்துக்குடியைச் சோ்ந்த செல்லையா மகன் பட்டராஜா (38) உயிரிழந்தாா். மேலும் காயமடைந்த வேன் ஓட்டுநா் தண்டீஸ்வரன் உள்ளிட்ட 15 போ் விருதுநகா், கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.