புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராஜபாளையத்தில் தேங்காய் உடைத்து தென்னை விவசாயிகள் போராட்டம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தென்னை விவசாயிகள் வெள்ளிக்கிழமை தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தென்னை விவசாயிகள் வெள்ளிக்கிழமை தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம், மதுரை ராஜா கடை தெரு பகுதியில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ராமச்சந்திர ராஜா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் காளிதாசன் சிறப்புரையாற்றினாா். போராட்டத்தில் கொப்பரைத் தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ. 140-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். கேரள மாநிலத்தை போல் முழு தேங்காயை ரூ. 50-க்கு கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். அனைத்து தென்னை மரங்களுக்கும் பயிா்க் காப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும் கேரள மாநிலத்தைப் போல் தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெய்யை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.