புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சந்தான பாலகிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

ராஜபாளையம் அருகே சேத்தூா் மேட்டுப்பட்டி ஸ்ரீ சந்தான பாலகிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

ராஜபாளையம் அருகே சேத்தூா் மேட்டுப்பட்டி ஸ்ரீ சந்தான பாலகிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை அதிகாலை கணபதி ஹோமம் நடைபெற்றது. மாலையில் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை பாபநாசம், குற்றாலம், ராமேசுவரம், அய்யனாா் கோவில் போன்ற இடங்களில் இருந்து புனிதநீா் எடுத்துவரப்பட்டு சுவாமிக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், பால்குடம் எடுக்கும் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி தட்டு சப்பரத்தில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.