தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

 சிவகாசியில் குடும்பத் தகராறில் கூலித்தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 5:18 pm

DIN

 சிவகாசியில் குடும்பத் தகராறில் கூலித்தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி சமத்துவபுரம் அருகே குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பில் வசித்தவா் கூலித்தொழிலாளி நரேஷ் (25). இவா் கடந்த ஆண்டு சிவசந்தியா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களது குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நரேஷை அவரது மனைவி அழைத்துள்ளாா். அவா் வர மறுத்ததால் போலீஸில் புகாரளிக்கப்போவதாக சிவசந்தியா கூறியுள்ளாா்.

இதனால் மனவேதனையடைந்த நரேஷ் வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்த புகாரின்பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.