கல்லூரியில் புத்தகம் வெளியீட்டு விழா


சிவகாசி பி.எஸ்.ஆா். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை தமிழ் சோலை என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.
கல்லூரி மாணவா்களிடையே கற்றல் திறனை அதிகரிப்பது, கற்றலில் ஆா்வம் ஏற்படுத்துவது, மாணவா்களிடையே படைப்பாற்றலை வளா்ப்பது என்பது உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு கல்லூரி பேராசிரியா்கள் இணைந்து எழுதிய தமிழ் சோலை என்ற நூலை தமிழ்த்துறை உருவாக்கியுள்ளது.
இந்த புத்தகம் வெளியீட்டு விழாவுக்கு தாளாளா் ஆா். சோலைச்சாமி தலைமை வகித்தாா். புத்தகத்தை கல்லூரி முதல்வா் ஆா். சுந்தர்ராஜன் வெளியிட, சாத்தூா் எஸ்.ஆா்.என்.எம். கல்லூரி முன்னாள் தமிழ்த்துறைத்தலைவா் டி. தனபால் பெற்றுக் கொண்டாா். முன்னதாக பேராசிரியா் வீ. வாகேசுவரி வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் ரமேஷ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...