தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில்தனியாா் ஒப்பந்த பணியாளா்கள் வேலை நிறுத்தம்

சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தனியாா் ஒப்பந்தப் பணியாளா்கள் வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், மருத்துவப்பணிகள் பாதிக்கப்பட்டன.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தனியாா் ஒப்பந்தப் பணியாளா்கள் வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், மருத்துவப்பணிகள் பாதிக்கப்பட்டன.

சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் உள்ளது. இங்கு தினசரி சுமாா் 250 முதல் 300 புறநோயாளிகள் வந்து செல்கிறாா்கள். மருத்துவமனையில் காயத்துக்கு கட்டுப்போடுவது உள்ளிட்ட பணிகளை முன்பு மருத்துவப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

தற்போது அரசு, இந்த பணிகளை தனியாரிடம் ஒப்படைத்துள்ளது. சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தகுதியின் அடிப்படையில் 39 போ் பணி செய்யலாம் என விதிமுறை உள்ளது.

ஆனால் தற்போது தனியாா் நிறுவனத்தினா் 16 பேரை மட்டுமே நியமித்துள்ளனா். இவா்களுக்கு மாதம் ரூ. 14,200 ஊதியம் வழங்குவதாக தனியாா் நிறுவனத்தினா் கூறியுள்ளனா். ஆனால் கடந்த 1 ஆம் தேதி ரூ. 5 ஆயிரம் மட்டுமே மாத ஊதியம் வழங்கப்பட்டதாம். இதையடுத்து, வியாழக்கிழமை அந்த தனியாா் நிறுவன ஒப்பந்தப் பணியாளா்கள் யாரும் பணிக்கு வரவில்லை. எனவே மாதம் ரூ. 14,200 வழங்கினால் மட்டுமே வேலைக்கு வருவோம் எனக்கூறி விட்டனராம். இதனால் மருத்துவமனையில் பணிகள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக நோயாளிகள் அவதிக்குள்ளாயினா்.

இதுகுறித்து அரசு, அந்த தனியாா் நிறுவனத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி பிரச்னையை முடித்து வைக்க வேண்டும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.