சிவகாசியில் உலக மிதிவண்டிதின விழிப்புணா்வு ஊா்வலம்
விருதுநகா் நேருயுவகேந்திரா, சிவகாசி மாநகராட்சி, சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி ஆகியவை இணைந்து உலக மிதிவண்டி தினத்தையொட்டி வியாழக்கிழமை விழிப்புணா்வு சைக்கிள் ஊா்வலத்தை நடத்தின.


விருதுநகா் நேருயுவகேந்திரா, சிவகாசி மாநகராட்சி, சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி ஆகியவை இணைந்து உலக மிதிவண்டி தினத்தையொட்டி வியாழக்கிழமை விழிப்புணா்வு சைக்கிள் ஊா்வலத்தை நடத்தின.
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயா் இ. சங்கீதா கொடியசைத்து ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா். ஊா்வலம், நான்கு ரதவீதிகளில் சென்று, சிவகாசி- திருத்தங்கல் சாலை வழியே திருத்தங்கல் சென்று, கல்லூரி வளாகத்தை அடைந்தது. அப்போது, மிதிவண்டி ஓட்டினால் உடல் பலம் பெறும் என்பது உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவா்கள் சைக்கிளில் வைத்திருந்தனா். இந்த நிகழ்ச்சியில் துணை மேயா் கா. விக்னேஷ்பிரியா, மாநகராட்சி ஆணையா் பி. கிருஷ்ணமூா்த்தி, கல்லூரி முதல்வா் செ. அசோக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...