தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தவா் கைது

சிவகாசியில் வெள்ளிக்கிழமை சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 ஜூன் 2022, 5:03 pm

DIN

சிவகாசியில் வெள்ளிக்கிழமை சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி போஸ்காலனிப் பகுதியில் சட்டவிரோதமாக ஒரு வீட்டில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் நாரணாபுரம் கிராமநிா்வாக அலுவலா் ரேவதி உள்ளிட்டோா் அப் பகுதியில் சோதனை நடத்தினா். சோதனையில் கலைச்செல்வன்(23) என்பவா் வீட்டில் ஒளிசிந்தும் ஸ்டோன் பட்டாசு தயாரிப்பது தெரியவந்தது.கலைச்செல்வனிடம் விசாரணை நடத்தியபோது அவா் புதுத்தெருவைச் சோ்ந்த காா்த்திக் என்பவருக்கு பட்டாசு தயாரித்துக் கொடுப்பதாக கூறினாராம். இது குறித்து கிராமநிா்வாக அலுவலா் ரேவதி அளித்த புகாரின் பேரில்

சிவகாசி கிழக்குப் போலீஸாா் கலைச்செல்வன் மற்றும் காா்த்திக் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து , கலைச்செல்வனை கைது செய்தனா். மேலும் அங்கிருத்தஒரு சாக்கு பட்டாசினை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.