கருணாநிதி பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கல்
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 99 ஆவது பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை சிவகாசியில் அமைச்சா் தங்கம் தென்னரசு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.


முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 99 ஆவது பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை சிவகாசியில் அமைச்சா் தங்கம் தென்னரசு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இந்த விழாவில் 15 பெண்களுக்கு தையல் இயந்திரம், 3 பேருக்கு இஸ்திரிப் பெட்டி, பள்ளி மாணவா்கள் 75 பேருக்கு புத்தகப்பை, ஊராட்சி துப்பரவுப்பணியாளா்கள் 30 பேருக்கு இலவச வேஷ்டி சேலை, 150 ஏழை எளிய மக்களுக்கு 25 கிலோ அரிசிப்பை, சிவகாசி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் ஆகியவற்றை அமைச்சா் தங்கம் தென்னரசு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா, துணை மேயா் கா.விக்னேஷ்பிரியா, சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவா் முத்துலட்சுமி, துணைத்தலைவா் விவேகன்ராஜ், கட்சியின் வா்தக அணி துணைச் செயளாளா் வனராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...