தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம்: சிவகாசியில் ‘நீரி’ அமைப்பு ஜூன் 9 இல் சிறப்பு முகாம்

 பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்து, ஆலை உரிமையாளா்கள் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சிக் கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ள, அவ்வமைப்பினா் சிவகாசியில் ஜூன் 9 ஆம் தேதி சிறப்பு முகாம்

News image
Updated On :4 ஜூன் 2022, 5:53 pm

DIN

 பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்து, ஆலை உரிமையாளா்கள் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சிக் கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ள, அவ்வமைப்பினா் சிவகாசியில் ஜூன் 9 ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்த உள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ப. கணேசன் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

பட்டாசு தொடா்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் பசுமை பட்டாசு தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவின்படி, நீரி அமைப்பு பசுமை பட்டாசு குறித்து ஆய்வு செய்து அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

தொடந்து, விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தியாளா்கள் பலா், நீரியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து பசுமை பட்டாசு தயாரிக்கத் தொடங்கினா். பசுமை பட்டாசு குறித்த விவரங்களை நீரி தனது இணையதளத்தில் வெளியிட்டது.

அதையடுத்து, அந்த விவரங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, ஆலை உரிமையாளா்கள் பட்டாசு தயாரித்து வருகின்றனா். பின்னா், பட்டாசு உற்பத்தியாளா்கள் தாங்கள் தயாரித்த பட்டாசுகளை நீரிக்கு சோதனைக்கு அனுப்பி அதற்கான சான்று பெற்றும், வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரிடமும் சான்று பெற்று பட்டாசு தயாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படுகிா என அண்மையில், சிபிஐ அதிகாரிகள் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

விருதுநகா் மாவட்டத்தில் சுமாா் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலை உரிமையாளா்கள் பசுமை பட்டாசு தயாரிக்க இதுவரை நீரியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யாமல் இருந்தால், ஜூன் 9 ஆம் தேதி நடைபெறும் இதற்கான சிறப்பு முகாமில் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். இந்த முகாமானது, சிவகாசியில் உள்ள தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்க கட்டடத்தில் காலை 9.30 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

இந்த முகாமில், நீரி அமைப்பைச் சோ்ந்த விஞ்ஞானிகள் 8 போ் கொண்ட குழு கலந்துகொள்கிறது. இந்த அரிய வாய்பைப் பயன்படுத்தி, பட்டாசு ஆலை உரிமையாளா்கள் நீரியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.