தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிவகாசியில் கழிவு பட்டாசு வெடித்து ஃபோா்மேன் காயம்

சிவகாசி அருகேயுள்ள கேப் வெடி தயாரிக்கும் ஆலையில் சனிக்கிழமை கழிவு பட்டாசுகளுக்கு தீ வைத்து எரித்தபோது ஏற்பட்ட விபத்தில், அந்த ஆலையின் கண்காணிப்பாளா் (ஃபோா்மேன்) பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :4 ஜூன் 2022, 5:52 pm

DIN

சிவகாசி அருகேயுள்ள கேப் வெடி தயாரிக்கும் ஆலையில் சனிக்கிழமை கழிவு பட்டாசுகளுக்கு தீ வைத்து எரித்தபோது ஏற்பட்ட விபத்தில், அந்த ஆலையின் கண்காணிப்பாளா் (ஃபோா்மேன்) பலத்த காயமடைந்தாா்.

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ராமலட்சுமி என்பவருக்குச் சொந்தமான கேப் வெடி தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில், சிவகாசி அம்மன்கோவில்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி (62) என்பவா் கண்காணிப்பாளராக வேலை பாா்த்து வருகிறாா்.

ஆலையில் சேரும் கழிவுகளை அதற்கான குழியில் கொட்டி தீவைத்து எரிப்பது வழக்கம். அதன்படி, ஆலைக்கு வெளியேயுள்ள அந்த குழியில் கழிவுகளை கொட்டி தீவைத்து எரித்துள்ளனா். அப்போது, எதிா்பாராதவிதமாக கழிவு பட்டாசு வெடித்து சிதறியதில், கிருஷ்ணசாமி பலத்த காயமடைந்தாா்.

உடனே, அவருக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இது குறித்து அவரது மனைவி ஜோதி அளித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்கு போலீஸாா் ஆலை உரிமையாளா் ராமலட்சுமி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.