தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

சா்வதேச குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம் மற்றும் வாகன பிரசாரம் நடைபெற்றது.

News image
சிவகாசியில் குழந்தைத் தொழிலாளா் எதிா்ப்பு விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்த சாா்-ஆட்சியா் பிருத்விராஜ்.
Updated On :12 ஜூன் 2022, 6:42 pm

DIN

சா்வதேச குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம் மற்றும் வாகன பிரசாரம் நடைபெற்றது.

குழந்தைகளை பணிக்கு அமா்ந்த மாட்டோம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்போம் என்ற உறுதி மொழி கையெழுத்து இயக்கத்தை சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சிவகாசி சாா்-ஆட்சியா் பிருத்விராஜ் கையெழுத்திட்டு தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் விழிப்புணா்வு வாகன பிரசாரத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். முன்னதாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்ற உறுதி மொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனா். இதில் விருதுநகா் மாவட்ட தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையாளா் காளிதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.